search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இனி சில்லரை பிரச்சனை இருக்காது..! சிங்கார சென்னை அட்டை குறித்து எம்டிசி மேலாண் இயக்குநர் விளக்கம்
    X

    இனி சில்லரை பிரச்சனை இருக்காது..! சிங்கார சென்னை அட்டை குறித்து எம்டிசி மேலாண் இயக்குநர் விளக்கம்

    • மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 'சிங்கார சென்னை' கார்டை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.
    • எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை அறிமுகம் செய்துள்ளோம்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், சிங்கார சென்னை கார்டின் சிறப்புகள் குறித்து - மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரெயிலிலும் பயண்படுத்திக் கொள்ளலாம், சென்னை மாநகர் பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்.

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இந்த அட்டையை அறிமுகம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 50 அட்டைகளை வினியோகித்துள்ளோம்.

    அட்டையை செல்போன் நம்பர் இணைந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.100 டாப் அப் செய்துக் கொள்ளலாம். இதன்மூலம், பேருந்து, ரெயில் பயணம் மேற்கொள்ளலாம்.

    இந்த பயண அட்டை திட்டத்தால், பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சில்லலை பிரச்சனை இருக்காது. இதனால், பணி சுமை குறையும் என நம்புகிறோம்.

    மாநகர் போக்குவரத்து கழகத்தின் 20 பேருந்து நிலையங்களில் அட்டை வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கூடுதலான இடங்களில் அட்டை வழங்கப்படும்.

    ஏற்கனவே சிஎம்ஆர்எல் அட்டை வைத்திருப்பவர்கள் அதே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். புதிய அட்டை வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

    இந்த அட்டை சென்னையில் மட்டுமல்ல, வெளி மாநிலத்தில் இயங்கும் மெட்ரோ ரெயிலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே அனுமதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×