search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இது ஒரு Useless பட்ஜெட்- துணை முதலமைச்சர் உதயநிதி
    X

    இது ஒரு "Useless" பட்ஜெட்- துணை முதலமைச்சர் உதயநிதி

    • மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
    • தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றிானர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மிக மிக முக்கியமான நாளில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

    கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் பெற்று, 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர குமார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.

    அந்த சூழலில் வெற்றியோடு இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு ஒரு பயனற்ற பழிவாங்குகின்ற ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட்.

    அப்படி ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.

    அதில், தமிழ்நாட்டிற்கென ஒரு திட்டத்தை கூட அவர் அறிவிக்கவில்லை. திட்டம் மட்டும் இல்லை தமிழ்நாடு என்கிற வார்த்தையை ஒரு முறை கூட அவர் பயன்படுத்தவில்லை.

    அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீது பாசம். ஆனால், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.

    பிற மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அங்கு தேர்தல் வர இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பீகார் மாநிலத்திற்கு மட்டும் பல்லாயிர கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.

    இது பீகார் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக போட்ட பட்ஜெட் மாதிரி தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் தன் கூட இருக்கிற நிதிஷ் குமாரின் கூட்டணியை உடைத்துவிட்டு அவரின் காலை வாரிவிட்டு அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்கிற ஒரே திட்டத்தோடு போட்டிற்கிற பட்ஜெட் இது.

    ஏன் என்றால் பாஜகவின் வரலாறு அப்படி.

    மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

    ஈரோடு கிழக்கில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.

    தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×