search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    த.வெ.க. மாநாடு: விஜய் பேசியதை பார்க்கல, பார்த்துவிட்டு பேசுகிறேன்.. துணை முதல்வர் உதயநிதி
    X

    த.வெ.க. மாநாடு: விஜய் பேசியதை பார்க்கல, பார்த்துவிட்டு பேசுகிறேன்.. துணை முதல்வர் உதயநிதி

    • தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாட்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு அரசியலில் தங்களது எதிரிகள் யார் என்பதை தெளிவுப்படுத்தினார்.

    இது தொடர்பான உரையில், "நாட்டை பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி, அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியர், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்பம் நமது எதிரி," என்று விஜய் பேசினார்.

    இது குறித்து பேசும் போது, தி.மு.க. கட்சியை சாடியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாநாட்டில் விஜய் பேசியதை நான் பார்க்கவில்லை, பார்த்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன். முழு பேச்சை பார்த்த பிறகு தான் பேச முடியும்," என்று கூறினார்.

    Next Story
    ×