என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9146581-chandrakumar.webp)
X
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்
By
மாலை மலர்10 Feb 2025 10:34 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
- சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.
சபாநாயகர் அறையில் முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×
X