search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது- திருமாவளவன்
    X

    அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது- திருமாவளவன்

    • குற்றவாளி ஞானசேகரனுக்கு பிணை வழங்கக்கூடாது.
    • குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.

    நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது" என்றார்.

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

    அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.

    குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது. குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டுவது ஆதார அரசியல்.

    அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.

    லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.

    அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×