என் மலர்
தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் மானபங்கம்- போலீசார் மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

- விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்
- அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த வழக்கில், அப்போதைய எஸ்.ஐ உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றால். ஆனால் ஊர் மக்கள் அவரை மீட்டனர்.
பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது
ரங்கசாமி, வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.36,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.