என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
தைவான் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
- கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ரிக்டர் அளவில் 7.0 மற்றும் அதற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படுகிறது
தைபே:
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.
தைவானைப் பொருத்தவரை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடும். எனவே, இன்றைய நிலநடுக்கம் 6.6 என கடுமையானதாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் சில நிலநடுக்கங்கள் ஆபத்தானதாகவும், கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கலாம். எனினும், நிலநடுக்கம் எந்த பகுதியில் தாக்குகிறது மற்றும் எந்த ஆழத்தில் உள்ளது என்பதைப் பொருத்து பாதிப்பு இருக்கும்.