search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    அமெரிக்க பெண் உருவாக்கிய பாலியல் சாம்ராஜ்யம்.. ஆசிய பெண்களை வைத்து இயங்கிய ஹை கிளாஸ் நெட்வொர்க்
    X

    அமெரிக்க பெண் உருவாக்கிய பாலியல் சாம்ராஜ்யம்.. ஆசிய பெண்களை வைத்து இயங்கிய ஹை கிளாஸ் நெட்வொர்க்

    • அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
    • பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை உருவாக்கியுள்ளார்

    அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

    அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×