என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஆப்கானை உலுக்கிய தற்கொலைப்படை தாக்குதல்- அலுவலகத்தில் வைத்து ஆளுநர் படுகொலை
- தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில்
- நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த கொடூர தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.
தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.