search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 3 நாடுகளில் உடனடியாக நிறுத்தப்பட்ட விமான சேவை
    X

    ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 3 நாடுகளில் உடனடியாக நிறுத்தப்பட்ட விமான சேவை

    • ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
    • சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

    ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.

    அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.

    சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    Next Story
    ×