search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    1500 ஆண்டுகள் பழைய,  மோசஸூடன் தொடர்புள்ள நினைவுச்சின்னம் கண்டெடுப்பு
    X

    1500 ஆண்டுகள் பழைய, மோசஸூடன் தொடர்புள்ள நினைவுச்சின்னம் கண்டெடுப்பு

    • சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
    • கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

    தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது அரிய பொருளை கண்டுபிடித்தனர். இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

    பத்து கட்டளைகளைப் பெற்ற மோசஸூடன் இந்த தந்தப்பெட்டி இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புனிதமான ஆரம்பகால கிறிஸ்தவ பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நினைவுச்சின்னம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மிக நுட்பமாக, அதிக வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த பெட்டியானது இர்சென் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதியான பர்க்பிச்சலின் உச்சியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்திற்குள் ஒரு பலிபீடத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.

    கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஜெரால்ட் கிராபெர் என்பவர் கூறுகையில், உலகளவில் இதுபோன்ற சுமார் 40 தந்தப் பெட்டிகள் எங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை, கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியின் போது இவற்றில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

    Next Story
    ×