search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    21-ம் நூற்றாண்டு நமக்கானது: ஏசியன்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    21-ம் நூற்றாண்டு நமக்கானது: ஏசியன்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

    • இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது
    • இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது

    ஏசியன் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் 20-வது ஏசியன்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய மாநாடு இந்தோனேசியாவில் இன்று நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோ அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியாவுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றடைந்த மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் மோடி, தான் தங்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை அசைத்தும் மோடியுடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கலைக்குழுவினர் நடனமாடி மோடியை வரவேற்றனர். இந்தோனேசியாவுக்கு சென்றடைந்ததும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜகா்த்தாவுக்கு சென்றடைந்துள்ளேன். ஏசியன் தொடர்பான கூட்டங்களை எதிர்நோக்கி இருக்கிறேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.

    பின்னர், இன்று காலை நடந்த 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெருமை. உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நமது (இந்தியா-இந்தோனேசியா) கூட்டான்மை நான்காவது சகாப்தத்தில் நுழைகிறது.

    கடந்த ஆண்டு நாங்கள் இந்தியா-ஏசியன் நட்பு தினத்தை கொண்டாடி விரிவாக கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும், ஆசியாவையும் ஒன்றிணைக்கிறது.

    அதனுடன் நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு, பல்முனை உலகின் நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியா உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன் முயற்சியிலும் இந்த பகுதி முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த ஆண்டின் கருப்பொருளாக ஏசியன் விஷயங்கள் உள்ளன. அது வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏசியன் கூட்டமைப்பு முக்கியமானது.

    இங்கு அனைவரின் குரல் கேட்கப்படுகிறது. ஏனென்றால் 2-வது வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது.

    21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நம் அனைவரின் நூற்றாண்டு. கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை உருவாக்குவது மற்றும் மனித நலனுக்காக அனைவரின் முயற்சிகளை உருவாக்குவது நம் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×