என் மலர்
உலகம்
X
நைஜீரியாவில் சோகம்: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி
Byமாலை மலர்5 Feb 2025 11:00 PM IST
- நைஜீரியாவில் உள்ள பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது.
இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
X