search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    Bill Gates Backs kamala Harris
    X

    அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

    • நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
    • 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.

    சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.

    Next Story
    ×