என் மலர்
உலகம்

X
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி, தொழிற்பயிற்சி வழங்கிய இங்கிலாந்து தம்பதி கைது
By
மாலை மலர்25 Feb 2025 5:43 AM IST

- தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
- தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ரெனால்ட்ஸ் (வயது 79). அவர் தனது மனைவி பார்பி (75) உடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் குடியேறினார்.
இந்த தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையே தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த தம்பதியினர் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். இதன்மூலம் ஏராளமான பெண்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இருவரும் தற்போது தலிபான்களால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
X