search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புதிய வைரஸ் பற்றி பீதி அடைய வேண்டாம்- சீனா சொல்கிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புதிய வைரஸ் பற்றி பீதி அடைய வேண்டாம்- சீனா சொல்கிறது

    • சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும்.

    நோய்களின் தீவிரம் குறைவாக உள்ளது. முந்தைய ஆண்டை விட சிறிய அளவில் பரவுகிறது. சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சீனாவில் பயணம் செய்வது பாதுகாப்பானது. தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×