என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கொலம்பியா
- அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.
பாரன்கில்லா:
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.
தீயணைப்பு பணியின்போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். ஜேவியர் சோலனோ (வயது 53) என்ற அந்த வீரர், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக தீயணைப்பு துறை தலைவர் ஜேமி பெரேஸ் தெரிவித்தார். குடோனில் உள்ள மற்ற டேங்குகளுக்கு தீ பரவாமல் தடுப்பதே தங்கள் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். தீ விபத்து காரணமாக துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- நிலச்சரிவில் சிக்கி 8 சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகி உள்ளனர்.
- தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பகோடா:
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகினர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 சிறுவர்களும் அட்ங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
- கொலம்பியாவில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலியாகினர்.
பகோடா:
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- விமானம் விழுந்ததில் 7 வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
- மெடலின் நகரம் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு பகுதியாகும்
மெடலின்:
கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட 8 பேரும் இறந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏழு வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெடலின் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு ஆகும். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டில், பிரேசிலின் சாப்கோயென்ஸ் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தீர்ந்து நகருக்கு அருகிலுள்ள மலைகளில் விழுந்து நொறுங்கியதில் 16 வீரர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொலம்பியாவில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கலிபோர்னியா:
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல்
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோ கடந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்ற பின்னர் பொது பாதுகாப்பு பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் ஆயுதங்களைக் கீழே போட்டு 2016 இல் அரசுடன் சமாதான உடன்படிக்கைக்கு மேற்கொண்டனர். மேலும் பல கிளர்ச்சிக் குழுக்கள் போர் நிறுத்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் பெட்ரோ கூறியுள்ளார்.
- சான்டா ரோசா டிலிமா பகுதியில் நடந்த திருவிழாவை படம்பிடித்து, செய்தி சேகரித்துக் கொண்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
- மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பொகட்டா:
கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் 'சொல் டிஜிட்டர்' என்ற பெயரில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் லீனர் மோண்டிரோ ஆர்டிகா (வயது37), தலியா கான்ட் ரிராஸ் கேண்டில்லோ (39) ஆகிய இருவரும் செய்தியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம் பிடிக்க சென்றனர். சான்டா ரோசா டிலிமா பகுதியில் நடந்த திருவிழாவை படம்பிடித்து, செய்தி சேகரித்துக் கொண்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரீபிரஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இருவரும் பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொலம்பியாவில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை மற்றும் படுகொலை சம்பவத்தால் பத்திரிகையாளர்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
- லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறைகளில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- கொலம்பியாவில் மட்டும் 97,000 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போகோடா:
லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொடிய சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில், 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்த ஆறு சிறைக் கலவரங்களில் கலவரங்களில் இதுவரை கிட்டத்தட்ட 400 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலம்பியாவில் தென்மேற்கு பகுதியான துலுவா நகரத்தின் சிறையில் நடந்த கலவரத்தில் இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விசாரணையில், சிறையிலிருந்து தப்பிக்க அதிகாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிறைக்குள் தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட மோதலால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கலவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என துலுவா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.
- தங்க புதையலுடன் கடலில் மூழ்கிய கப்பல் யாருக்கு சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான்ஜோஸ் கப்பல் 600 பேருடன் மூழ்கியது. அதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது.
1708-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான்ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனாலும் தங்கத்துடன் மூழ்கிய சான்ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக கொலம்பியா அரசு அறிவித்திருந்தது. ரோசாரியோ தீவுகளுக்கு அருகே கப்பல் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது. ரிடியோலில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கி கிடக்கின்றன.
நீலம், பச்சை நிறங்களில் கடலின் அடியில் தங்க நாணயங்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கோப்பைகள் சிதறி கிடக்கின்றன. மேலும் ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் கிடக்கிறது. இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தங்க புதையலுடன் கடலில் மூழ்கிய கப்பல் யாருக்கு சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்