என் மலர்
கொலம்பியா
- கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் டிரம்ப் எச்சரிக்கை.
- 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது.

அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது. அந்த விமானங்கள், 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை வந்தடைந்தது.
- கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
- நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.
பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

- கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர்.
- தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
பொகோடா:
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.
அந்தவகையில் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.
- ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்
- அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி கொரில்லா ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 80 போ் உயிரிழந்தனர்.
வெனிசுலாவை ஒட்டிய கொலம்பிய எல்லைப் பிரதேசத்தில் உள்ள கேட்டடம்போ பகுதியில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபாா்க்) ஆகிய இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.
ஃபாா்க் அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நிராயுதபாணியை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்.

இரு குழுக்களின் வன்முறைக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாளில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழன் முதல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்த 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஎல்என்-னுடன் நடத்திவந்த போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கோகைன் வர்த்தக தலமாக உள்ள இப்பகுதியில் யார் வர்தகத்தை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக போட்டி குழுக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன.
- நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
- வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
போகோடா:
கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
அந்தப் பேருந்து வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
- கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் கேத்தி ஜூவினோ. அந்த நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான கிரீன் கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற அவையில் பொது சுகாதாரம் தொடர்பான மசோதாவுக்கான விவாதம் நடந்தது. விவாதத்தில் கேத்தி ஜூவினோ கலந்து கொண்டிருந்தார். அப்போது கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானநிலையில் சமூக வலைத்ததளத்தில் பதிவிடப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி ஒரே நாளில் வைரலானது. இதனை தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
- 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
- இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
- ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர்.
வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.
- இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரியை நாஜிக்களுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
- இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார்.
பெகோட்டா:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.
பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
- நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது
தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.
அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.
மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.
கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில் இந்நாட்டை முன்னணியில் வைத்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.
அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.
இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.
கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.
சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பிறந்தநாளன்று புதிய ஆடை அணிந்து பள்ளிக்கு சென்று சக மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் இவையெல்லாம் ஏழை மாணவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாததாகவே உள்ளது.
இந்நிலையில் ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. கொலம்பியாவின் எபிஜிகோ பகுதியை சேர்ந்த சிறுவன் ஏஞ்சல் டேவிட். 8 வயதான இந்த ஏழை சிறுவன் இதுவரை பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது.
இந்நிலையில் அவனது 8-வது பிறந்தநாளை அறிந்த பள்ளி ஆசிரியர் காசாஸ் சிமெனா அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வகுப்பறையில் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டார்.
அதன்படி சிறுவன் டேவிட் வகுப்பறைக்கு வந்த போது சக மாணவர்கள் அவரை கைதட்டி, பிறந்தநாள் வாழ்த்து, பாட்டு பாடி வரவேற்றுள்ளனர். மேலும் வகுப்பறையில் பலூன்கள் கட்டி, அலங்காரம் செய்து சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது.
- போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கவுகா:
தென்மேற்கு கொலம்பியாவின் கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. திடீரென இந்த கார் வெடித்து சிதறியது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.
மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ஒரு பள்ளி, மருத்துவமனை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்து உள்ளது.