search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: திருமண  வயதை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம் -  கொண்டாடித் தீர்த்த  எம்.பி.க்கள்
    X

    VIDEO: திருமண வயதை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம் - கொண்டாடித் தீர்த்த எம்.பி.க்கள்

    • 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
    • இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.

    லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

    இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×