என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இந்தியர்களை வஞ்சிக்கிறது.. 70 ஆயிரம் மாணவர்களுக்கு சிக்கல்.. கனடா முழுவதும் வெடித்த போராட்டம்
- 70,000 வெளிநாட்டு மாணவர்களின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ளது
- இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக நேற்று முன் தினம் அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த முடிவு தங்களின் எதிர்காலக் கனவுகளுடன் கனடாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர்.
எனவே ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரின்ஸ் எட்வார்ட் மாகாணத்தில் உள்ள சட்டமன்ற கட்டடத்தின் வெளியே இந்திய மாணவர்கள் திரண்டு அரசின் இந்த திடீர் முடிவை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓன்டாரியோ, மானிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். ஒர்க் பெர்மிட்களின் கால அளவை அதிகரிப்பது, நிறைந்த குடியுரிமை கிடைப்பதற்கு சிக்கல் இல்லாத நடைமுறையை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அவர்கள் தங்களின் கோரிக்கைகளாக முன்வைத்து போராடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்