என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- 20 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்
- நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
- பொதுமக்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.