search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மின்சார நெருக்கடியை சமாளிக்க ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க முடிவு
    X

    மின்சார நெருக்கடியை சமாளிக்க ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை முன்கூட்டியே அணைக்க முடிவு

    • ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது.

    பாரீஸ் :

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை ஈபிள் கோபுரத்தில் மின்விளக்குள் ஒளிரும். அதன்பிறகு மின் விளக்குகள் அணைக்கப்படும்.

    இந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பிரான்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகளை முன்கூட்டியே அணைக்க பாரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 23-ந்தேதி முதல் உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கே ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என அந்த நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ கூறியுள்ளார்.

    அதுமட்டும் இன்றி பாரீசில் உள்ள பொதுகட்டிடங்களில் இரவு 10 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×