என் மலர்
உலகம்
தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு காரணமாக விபத்து நடந்துள்ளது: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்
- அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளாகி 38 பேர் உயிரிழந்தனர்.
- ரஷியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு விமானம் உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்.
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த மோதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷியாவின் ஏவுகணை அல்லது வான் பாதுபாக்கு சிஸ்டத்தால் விமானம் விபத்துக்குள்ளானதாக மீடியாக்கள் சந்தேகம் கிளப்பி வந்தன.
இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு பாதிப்பு (physical) ஆகிவற்றால் விமானம் விபத்துக்குள்ளானது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ரஷியா செல்லும் அனைத்து விமானங்களையும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக தரையிறக்கியுள்ளது.
விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது பொதுமக்களின் கட்டமைப்புகளை குறிவைத்து குரோன்ஸி மற்றும் விளாடிகவ்காஸ் நகரங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியா தெரிவித்திருந்தது.
மாஸ்கோ சேதமடைந்த ஜெட் விமானத்தை கடலைக் கடக்க கட்டாயப்படுத்தியது. பெரும்பாலும் அவர்களின் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.