என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அசர்பைஜான்
- மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் சுற்றுலா பயணி ஒருவர் போலீசில் சிக்கினார்.
- இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லிஸ்பன்:
அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஆர்டர் செய்ய முயன்றார்.
மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது.
இதை அறியாத அவர் ஆர்டர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்தனர். அதன்பின், அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தபின், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் இல்லை என உறுதி செய்தனர்.
விசாரணையில், மொழிபெயர்ப்பில் நடந்த பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
- இறந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் ஆவர் என்றும் அவர்களில் ஐந்து குழந்தைகள் என்றும் கூறினார்.
- தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.
இங்கு, அஜர்பைஜான் நடத்திய ஒரு நாள் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதாக பிரிவினைவாத அதிகாரி ஒருவர் கூறினார்.
அப்போது அவர். "குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்று சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
மேலும் அவர், இறந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் ஆவர் என்றும் அவர்களில் ஐந்து குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் நேற்று மாலை, அதன் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் கூறினார்.
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை உலக சாதனை படைத்தார்.
- இந்தப் போட்டியில், அவர் தகுதிச்சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தது சாதனை ஆகும்.
பகு:
அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் (19), கலந்துகொண்டார்.
இந்தப் போட்டியில், அவர் தகுதிச்சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தார். கடந்த 1994-ம் ஆண்டு பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா 594 புள்ளிகள் சேர்த்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்துவந்தது. அதனை சங்வான் முறியடித்துள்ளார். இதற்கு முன் 1989-ம் ஆண்டு ரஷிய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் (593 புள்ளிகள்) சாதனையையும் முறியடித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்