என் மலர்
உலகம்

சீனாவில் போலி கால்சென்டர் மோசடி வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

- பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
- போலி கால் சென்டரில் இருந்து ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.
பீஜிங்:
மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சமீப காலமாக போலி கால்சென்டர் மோசடி அதிகளவில் அரங்கேறுகின்றன. இதற்காக நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என்று ஆசை வார்த்தை கூறி படித்த இளைஞர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது.
ஆனால் அங்கு சென்ற பிறகு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் சீன தொழிலதிபர்களே குறிவைக்கப்பட்டதால் ஆங்கிலம், சீன மொழி தெரிந்த இளைஞர்களை மோசடி கும்பல் அதிகளவில் பணியமர்த்தியது. எனவே போலி கால் சென்டரில் இருந்து ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே இதுதொடர்பான வழக்கு சீன கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சீன கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.