என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வைன் உற்பத்தியாளர்களை காக்க ரூ.1700 கோடி செலவிடும் பிரான்ஸ்
- ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் அருந்தும் பழக்கம் குறைந்து சரிவை சந்தித்துள்ளது
- அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை எனும் நிலையில் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது
ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.
நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்ஸில் 15 சதவீதம், ஜெர்மனியில் 22 சதவீதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவீதம் என்று சரிவின் சதவீதம் உள்ளது. அதே சமயத்தில், உலகின் மிக பெரிய வைன் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் உற்பத்தி 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வருடங்களாகவே மக்களின் வாங்கும் சக்தி பொருளாதார காரணங்களால் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தொழிற்சாலை சாராத வழியில் தயாரிக்கப்படும் பீர் மதுபானத்தை விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர்.
இதனால் "அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை" எனும் நிலை தோன்றி வைன் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிகப்படியாக உற்பத்தியாகி உள்ள வைன் மதுபானத்தை அழிக்கவும், அதே சமயம் வைன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பிரான்ஸ் அரசாங்கம் சுமார் ரூ.1782 கோடி (200 மில்லியன் யூரோ) செலவிடுகிறது.
அதிக வைன் பானங்களையும், கைகளை சுத்தம் செய்ய உதவும் சானிடைசர், சுத்திகரிப்பு பொருட்கள், நறுமண பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் வகைகளை அரசாங்கம் வாங்கி கொள்வதற்கும், வைன் உற்பத்தியாளர்களை ஆலிவ் போன்ற மாற்று விவசாய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
"அரசு உதவி செய்தாலும் மது உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தாங்களாகவே திட்டமிட்டு, உபயோகிப்பாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தங்கள் தயாரிப்புகளை மாற்றி கொள்ள வேண்டும்" என அந்நாட்டு விவசாய துறை அமைச்சர் மார்க் ஃபெஸ்னு தெரிவித்தார்.