search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அழியும் டால்பின்களை காக்க அதிரடி நடவடிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அழியும் டால்பின்களை காக்க அதிரடி நடவடிக்கை

    • அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது
    • சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது.

    சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டால்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.

    மீனிபிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டால்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டால்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர்.

    அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது.

    உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது.

    இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மீன்பிடி தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிஸ்கே விரிகுடா (Bay of Biscay) எனப்படும் பிரான்சின் வடமேற்கு கரையோர பிரிட்டனியில் உள்ள ஃபினிஸ்டியர் பகுதியிலிருந்து அண்டை நாடான ஸ்பெயினின் கடல் எல்லை வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது.

    பல மில்லியன் யூரோக்கள் இதனால் கடல் வணிகத்தில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இழப்பை ஈடு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது.

    Next Story
    ×