என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![லாட்டரியில் ரூ.33 கோடி - பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி லாட்டரியில் ரூ.33 கோடி - பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2024/07/11/3231614-lottery0.webp)
லாட்டரியில் ரூ.33 கோடி - பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காரில் பயணம் மேற்கொண்ட போது 4 மில்லியன் பரிசு தொடர்பான செய்தி கிடைத்தது.
- மறுபடியும் இரண்டாவது லாட்டரியை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் சரியாக வேலை செய்தது.
அதிர்ஷ்டம் என்பது யாருக்கு எப்போ எப்படி வரும்னு தெரியாது. கொடுக்கிற கடவுள் கூரையை பியத்துக்கொண்டு கொடுப்பார் என்று பழமொழி உண்டு. அதுபோல தான் லாட்டரி பரிசு என்பதும்...
பொதுவாக லாட்டரியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்று தான் சொல்கிறார்கள். அதாவது பரிசு விழுந்தவர்களுக்கு ஒரே நாளில் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாறுகிறது.
அந்தவகையில், காருக்கு பெட்ரோல் போட சென்ற இடத்தில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சாகினாவ் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் மிச்சிகன் லாட்டரியை வாங்கியுள்ளார். முதல்முறை லாட்டரியை ஸ்கேன் செய்த போது ஒரு தகவல் வந்தது. திரும்பவும் ஸ்கேனை செய்தேன். அப்போதும் ஒரு செய்தி வந்தது. அப்போது இயந்திர கோளாறு என்று நினைத்தேன்.
மறுபடியும் இரண்டாவது லாட்டரியை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் சரியாக வேலை செய்தது. இதையடுத்து காரில் பயணம் மேற்கொண்ட போது 4 மில்லியன் பரிசு தொடர்பான செய்தி கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி. இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த பரிசு தொகையை வைத்து முதலீடு மற்றும் நிலம் வாங்குவதற்கு ஒதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.