என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
'ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு'.. ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் உறுதி
- ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்
ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகமான IRNA மூலம் உறுதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார்.
1984 இல் லேபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின்மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். ஹிஸ்புல்லா என்ற சொல்லுக்கு கடவுளின் ஆட்சி என்று பொருள். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது.
ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்