என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் டிரம்பை முந்திய கமலா ஹாரிஸ்
- ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.
- 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தார்.
இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் டிரம்பைவிட 38 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ஆசிய அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்பை விட கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார்.
ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது முடிவு செய்யப்படாதவர்கள் 6 சதவீதம்.
ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட 2024 ஆசிய அமெரிக்க வாக்காளர் கணக்கெடுப்பில், ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் ஜோ பைடனை ஆதரித்தனர். 31 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். அதே நேரத்தில் 23 சதவீதம் பேர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளோம் அல்லது முடிவு செய்யவில்லை என கூறினர்.
அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து வெளியேறி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு இதுவாகும்.