search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நியாயமா எனக்குதான் நோபல் பரிசு கொடுத்திருக்கனும்.. ஆனா ஒபாமாவுக்கு போயி.. டிரம்ப் ஆதங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நியாயமா எனக்குதான் நோபல் பரிசு கொடுத்திருக்கனும்.. ஆனா ஒபாமாவுக்கு போயி.. டிரம்ப் ஆதங்கம்

    • அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது.
    • சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் ஆளுங்கட்சி [டெமாகிரடிக்] சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சி [ரிபப்லிக்] சார்பில் நிற்கும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். நெவாடா நகரில் நடத்த மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்ற பிரச்சாரக் நிகழ்வில் பேசிய டிரம்ப், அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர்.

    அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது. அவர் [தேர்தலில் வென்று] நிர்வாகம் செய்ய தொடங்கிய உடனே அந்த விருதை அவர் பெற்றுள்ளார். நான் அவரை விட மிகப்பெரிய, மிக சிறந்த, யூகிக்கவே முடியாத தேர்தலில் வெற்றி பெற்றேன், ஆனால் அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசை வழங்கியுள்ளார்கள் என்று தனது ஆதங்கத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார்.

    பராக் ஒபாமாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஒபாமாவின் இடத்தில் தான் உட்பட யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று டிரம்ப் இந்த கூட்டத்தில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளதாக டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை தற்போது சுமார் 2.5 கோடி பேர் முன்கூட்டியே தபால் மூலம் வாக்களித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×