என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வளர்ப்பு நாய்களை சாப்பிடும் குடியேற்றவாசிகள்.. டிரம்ப் பேசுவதை டிவியில் பார்த்த நாய் செய்த செயல் - வீடியோ
- உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர்.
- உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தது கோல்டன் ரெட்ரீவர் நாய்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 1 மணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து குடியேறுபவர்களின் மீதான வெறுப்பு டிரம்ப்பின் முன்வைக்கும் அரசியலில் பிரதானமானது.
2017 முதல் 2021 வரை அவர் அதிபராக இருந்தபோது குடியேற்றம் மீதான கடுமையான போக்கை அவர் கடைபிடித்தார். இந்நிலையில் கமலா ஹாரிஸுடன் நடந்த விவாதத்திலும் டிரம்ப்பின் குடியேற்றவாசிகள் மீதான வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. விவாதத்தின்போது பேசிய டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் -இல் குடியேற்றவாசிகள், மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகின்றனர். [அமெரிக்கா] உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுதான் தற்போது இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருந்தார்.
ஆனால் டிரம்ப் கூறியதற்கு எந்த விதமான ஆதரங்களும் இல்லை என்றும் இணையத்தில் பரவிய வதந்திகளை டிரம்ப் உண்மை போல பேசி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசியதையே பேசி வருவதாக கமலா ஹாரிஸும் விவாதத்தின்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் நாய்களை குடியேற்றவாசிகள் கொன்று சாப்பிடுவதாக விவாதத்தில் பேசுவதை தனது உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அங்கிருந்து எழுந்து சோபவின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் வெலவெலத்து நிற்பதை அந்த உரிமையாளர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
THEY'RE EATING THE DOGS pic.twitter.com/lQqMW5l8pT
— Tarquin ?? (@Tarquin_Helmet) September 11, 2024
இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் சுமார் 14 மில்லயன் பார்வைகளையும் தாண்டி வைரலாகி வருகிறது. நாயின் ரியாக்ஷனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் டிரம்பை கலாய்த்து வருகிறனர். இதற்கிடையே குடியேற்றவாசிகள் நாய்களை சாப்பிடுவதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு வெள்ளை மாளிகையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்