search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    • கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர்.
    • அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2016- ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 3.2 லட்சமாக இருந்தது.

    தற்போது 2024-ம் ஆண்டில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 12.3 லட்சமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். அங்கு 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

    டெக்சாசில் 1.5 லட்சம் பேர், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர், இல்லினாய்சில் 83 ஆயிரம் பேர், வர்ஜீனியாவில் 78 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.

    அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.

    இதுகுறித்து வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் அசோக் கொல்லா கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்களுடன் 10 ஆயிரம் எச்1பி விசா வைத்திருப்பவர்களும் வருகிறார்கள்.

    அமெரிக்காவில் தெலுங்கு பேசுபவர்களில் பழைய தலைமுறையினர் பெரும்பாலும் தொழில்முனைவோராக உள்ளனர். அதே–சமயம் 80 சதவீத இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உள்ளனர் என்றார். இந்த தகவல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×