search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    மோசமான பாசாங்குத்தனம்: ஜம்மு காஷ்மீர் குறித்து ஐ.நா.வில் பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி
    X

    மோசமான பாசாங்குத்தனம்: ஜம்மு காஷ்மீர் குறித்து ஐ.நா.வில் பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி

    • பாலஸ்தீன மக்களை போல் ஜம்மு காஷ்மீர் மக்களும் சுதந்திரம், உரிமைக்காக போராடுவதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு.
    • பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது.

    ஐ.நா. பொதுசபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். அவரது 20 நிமிட பேசிய அவர் "பாலஸ்தீன மக்களை போல் ஜம்மு காஷ்மீர் மக்களும் அவர்களுடைய சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிவற்றிற்கான நூற்றாண்டு காலமாக போராடி வருகிறார்கள்" என்றார்.

    இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா சார்பில் பேசிய, ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களநாதன் பயங்கரவாதம், போதைப்பொருள், வர்த்தகம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு உலகளாவிய நற்பெயரைக் கொண்ட ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது" என குற்றம்சாட்டினார்.

    ஐ.நா. சபையில் பவிகா மங்களநாதன் பேசும்போது கூறியதாவது:-

    வருந்தத்தக்க வகையில் இந்த சபை இன்று காலை ஒரு கேலிக்கூத்தாகக் காணப்பட்டது. பாகிஸ்தான் பிரதமரின் உரையில் இந்தியாவைப் பற்றி நான் பேசுகிறேன். உலகம் அறிந்தது போல், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது. அது எங்களது பாராளுமன்றம், நிதித் தலைநகரம், மும்பை, சந்தைகள் மற்றும் புனித யாத்திரை இடங்களை தாக்கியுள்ளது. இதன் பட்டியல் மிகவும் நீளமானது. அப்படிப்பட்ட ஒரு நாடு வன்முறை பற்றி எங்கும் பேசுவது மிக மோசமான பாசாங்குத்தனம்.

    மோசடியான தேர்தல்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு, ஜனநாயகத்தில் அரசியல் தேர்வுகளைப் பற்றி பேசுவது இன்னும் அசாதாரணமானது.

    உண்மையான உண்மை என்னவென்றால், பாகிஸ்தானுக்கு எங்களது பிரதேசம் மீது பேராசை. உண்மையில், இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது.

    இவ்வாறு பவிகா மக்களநாதன் பதிலடி கொடுத்தார்.

    Next Story
    ×