என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சீனாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்க- மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
- பிரதமருக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு.
- மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.
பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் அவதூறு கருத்துக்களை தெரிவித்த சம்பவம் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவில் கசப்பான பக்கங்களாக பதிவாகி உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.
இதனிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது, மாலத்தீவு மற்றும் சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அதிபர் முய்சு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனா முயற்சி எடுக்க வேண்டும். மாலத்தீவின் வளர்ச்சியில் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது."
"மாலத்தீவு வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தொடங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் எங்களின் முதன்மை வணிக மையமாக சீனா இருந்தது. இதே நிலை மீண்டும் உருவாக வேண்டும் என விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.