search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    Hamas leader
    X

    ஹமாஸ் தலைவரை கொலை செய்ய ஈரான் ஏஜெண்டுகளை நியமித்த இஸ்ரேலின் உளவு அமைப்பு

    • இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
    • மேற்குலக நாடுகளில் உள்ள 2-வது பெரிய உளவு அமைப்பு மொஸாட் ஆகும்.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.

    அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர்.

    இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு வந்திருந்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதீத கூட்டம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள 3 அறைகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 7,000 பணியாளர்களுடன் இயங்கும் மொசாட் அமெரிக்காவின் CIA க்கு அடுத்தபடியாக மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்புஎன்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×