என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட விருப்பம்
- தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது.
- அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்.
வாஷிங்டன் :
அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அவர் அளித்த பேட்டியில், "அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் இது குறித்து நான் உறுதியான முடிவு எடுக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு உடல்நலப் பிரச்சினை தடையாக இருந்தாலும், அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்" என்று கூறினார்.
தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது. அடுத்த ஆண்டு அவருக்கு 81 வயதாகி விடும். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பது, அந்தப் பதவிக்காக ஜனநாயகக்கட்சியில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிக்கி ஹாலே உள்ளிட்டவர்களை அதிர வைத்துள்ளது.
குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ள டொனால்டு டிரம்புக்கு அப்போது 77 வயதாகி விடும்.