search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தலைநகர் வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்.. கலிபோர்னியாவிலும் வெற்றி
    X

    தலைநகர் வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்.. கலிபோர்னியாவிலும் வெற்றி

    • 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
    • தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்றார்

    அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

    அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    அந்த வகையில் பிரதானமான கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் உள்ள 54 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

    அதேபோல் தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 66 எலக்ட்ரல் வாக்குகளைக் கமலா ஹாரிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

    Next Story
    ×