search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்தார் வடகொரியா அதிபரின் சகோதரி
    X

    அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்தார் வடகொரியா அதிபரின் சகோதரி

    • வடகொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

    வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது.

    இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு "வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமானது. அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதாக உள்ளது" என விமர்சித்திருந்தார்.

    மேலும், "எந்தவித நிபந்தனை இல்லாமமல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

    செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றார்.

    Next Story
    ×