search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    திபெத் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு
    X

    திபெத் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

    • திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
    • அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பீஜிங்:

    சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

    நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

    சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×