search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து- 70 பேர் படுகாயம்
    X

    ரஷியாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து- 70 பேர் படுகாயம்

    • 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.

    ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.

    9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×