என் மலர்tooltip icon

    உலகம்

    1 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து வீடியோ எடுத்த தாய்.. சமூக ஊடகத்தில் நன்கொடை திரட்ட சித்ரவதை
    X

    1 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து வீடியோ எடுத்த தாய்.. சமூக ஊடகத்தில் நன்கொடை திரட்ட சித்ரவதை

    • மருந்துச் சீட்டுகளில் மூலம் மருந்தகத்திலிருந்து மருந்துகளை வாங்கி அந்த பெண் பெண் குழந்தைக்கு வழங்கியுள்ளார்
    • GofundMe என்ற நன்கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை நன்கொடை பெற்றுள்ளார்

    சமூக ஊடகங்களில் கவனம் ஈர்க்கவும் நன்கொடை பெறவும் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குழந்தைக்கு விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகிறோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு ஆஸ்திரேலிய பெண் சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார்.

    குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த 34 வயதான பெண், எந்த மருத்துவ அனுமதியும் இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மருந்துச் சீட்டுகளில் மூலம் மருந்தகத்திலிருந்து மருந்துகளை வாங்கி அந்த பெண், குழந்தைக்கு வழங்கியதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.

    மேலும் 2024, ஆகஸ்ட் 6 முதல் அக்டோபர் 15 வரை அந்தப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்று குழந்தையின் நிலை குறித்து சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மாத்திரைகள் மற்றும் சிறுக சிறுக அளித்த விசஷத்தின்மூலம் நோய்வாய்ப்பட்டு பரிதாபமான நிலையில் இருந்த குழந்தையின் வீடியோக்களை எடுத்து GofundMe என்ற நன்கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை அந்த பெண் நன்கொடை பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×