என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்: சுதா மூர்த்தி பெருமிதம்
Byமாலை மலர்29 April 2023 8:06 AM IST
- ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.
- அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக்தான்.
லண்டன் :
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு.
அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம்.
இது உண்மைதான்.
பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:-இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.
என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள்.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக் தான்.
Next Story
×