search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார்: நாசா அறிக்கை
    X

    சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார்: நாசா அறிக்கை

    • சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறைந்ததாக வெளியான தகவலை நாசா மறுத்துள்ளது.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை நாசா மறுத்துள்ளது.

    இந்நிலையில், நாசா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×