search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாள விமான விபத்து- முக்கிய தடயங்கள் உள்ள கருப்பு பெட்டிகள் மீட்பு
    X

    நேபாள விமான விபத்து- முக்கிய தடயங்கள் உள்ள கருப்பு பெட்டிகள் மீட்பு

    • விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றிய முக்கிய தடயங்கள் இந்த பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது வானொலி ஒலிபரப்புகள், காக்பிட்டில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் என்ஜின் சத்தங்கள் போன்ற மற்ற ஒலிகளையும் பதிவு செய்கிறது. ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டரில் விமானத்தின் வேகம், பறக்கும் உயரம் மற்றும் திசை, பைலட்டின் செயல்பாடுகள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் செயல்திறன் போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்கள் பதிவாகும்.

    Next Story
    ×