என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு
Byமாலை மலர்22 Oct 2024 7:48 AM IST
- இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அன்பானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர்களை ஆரத்தழுவி வழியனுப்பி பிரியாவிடை கொடுப்பது வழக்கம். அப்போது மனித உணர்ச்சிகள் தவழும் இடமாக விமான நிலையங்கள் இருக்கும்.
இந்தநிலையில் நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் 'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
Next Story
×