search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நித்தியானந்தாவின் கைலாசா 30 அமெரிக்க நகரங்களில் சிஸ்டர் சிட்டி மோசடி- பரபரப்பு தகவல்
    X

    நித்தியானந்தாவின் கைலாசா 30 அமெரிக்க நகரங்களில் சிஸ்டர் சிட்டி மோசடி- பரபரப்பு தகவல்

    • நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
    • கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் சமீபத்தில் நேவார்க் நகரம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

    நியூயார்க்:

    கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் இது பேசுபொருளாக ஆனபோதிலும், நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி சாமியாரான நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×