search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வட கொரியா..  சட்டத்திருத்தம் செய்ததன் பின்னணி என்ன?
    X

    தென் கொரியாவை 'எதிரி' நாடாக அறிவித்த வட கொரியா.. சட்டத்திருத்தம் செய்ததன் பின்னணி என்ன?

    • வட கொரிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அரசியலமைப்பில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியைக் கைவிட சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ரஷியா சீனா வரிசையில் மற்ற நாடுகளை விட்டு தனித்து இயங்கும் நாடு வட கொரியா. முன்கூறிய நாடுகளை விட வட கொரியா தன்னை மேலதிகமாகவே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடாக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது.

    இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது. வரலாற்றின் போக்கில் 2 நாடுகளும் பகையாளிகளாக மாறின. அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதாலும் தென் கொரியாவுடன் தொடர்ந்து பகைமை பாராட்டும் வட கொரியா தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

    குப்பை பலூன்களை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென் கொரியாவுடன் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்த சாலை மற்றும் ரெயில் இணைப்புகளை முற்றிலுமாக அழித்தது. இந்நிலையில் தென் கொரியாவை தனி நாடாக அங்கீகரித்தும் எதிரி நாடு என்றும் வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் வட கொரிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அரசியலமைப்பில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியைக் கைவிட தனது அரசியலைப்பில் வடகொரியா திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. சமீபத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    தற்போது தென் கொரியாவை எதிரி நாடாக வரையறுத்துள்ளது தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்துக்குத் தென் கொரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இரு கொரியாவையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×