என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![சாமானியனின் சொகுசு கார்- வைரலாகும் வீடியோ சாமானியனின் சொகுசு கார்- வைரலாகும் வீடியோ](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9255161-pakistan.webp)
X
சாமானியனின் சொகுசு கார்- வைரலாகும் வீடியோ
By
மாலை மலர்13 Feb 2025 7:56 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
- அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆடம்பர பொருட்கள் மீது சாமானியர்களுக்கு அலாதி ஆசை உண்டு. ஆனால் அவற்றின் அதிக விலை காரணமாக அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் தங்களது புத்திசாலித்தனம் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேசமயம் அவர்களது தனித்துவமான அந்த செயல் மற்றவர்களையும் ஈர்க்கிறது. அந்தவகையில் பாகிஸ்தானின் சாலையில் சென்ற ஒரு சொகுசு கார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது சிவப்பு நிறமுள்ள அந்த காரின் பின்புறத்தை பார்க்கும் எவரும் அதனை விலையுயர்ந்த கார் என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முன்புறமோ மோட்டார் சைக்கிள் மூலம் பொருத்தப்பட்டு அந்த கார் இயங்கியது.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Next Story
×
X