search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போர் நிறுத்தம்.. இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க சொன்ன ஹமாஸ் - அமெரிக்க அதிகாரி பகீர்
    X

    போர் நிறுத்தம்.. இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க சொன்ன ஹமாஸ் - அமெரிக்க அதிகாரி பகீர்

    • பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது தெரிவித்தார்.
    • இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாக பதில் அளிக்கப்பட்டது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய போர் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இருதரப்பும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக இஸ்ரேல் மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. மேலும், கத்தார் மற்றும் எகிப்து சார்பில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாகவே பதில் அளிக்கப்பட்டது.


    ஹமாஸ் விடுத்த கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க முடியும், சிலவற்றை ஏற்க முடியாது என ஆண்டனி பிளிங்கென் தெரிவித்தார். போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டான் கூறும் போது, "நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது," என தெரிவித்தார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரேபிய நாடுகள் இணைந்து உருவாக்கிய மூன்று கட்ட திட்டமிடலில், ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம், பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் சர்வதேச உதவியுடன் காசாவில் மறுக்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது என பரிந்துரைக்கப்பட்டது.

    "ஹமாஸ் விடுத்த பரிந்துரைகளில் பல கோரிக்கைகள் மிகவும் சிறியது தான், சில கோரிக்கைகள் எதிர்பார்க்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்ததை விட அதிக வேறுபாடுகளை கொண்டிருக்கிறது," என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிளிங்கென் தெரிவித்தார். எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் சார்பில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நேரடி அழுத்தம் கொடுக்க ஹமாஸ் அமெரிக்காவை வலியுறுத்தியதாக பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

    "போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் யாரும் இதுவரை பேசி நாங்கள் கேட்கவில்லை," என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×